
ஐரோப்பாவில் ஜூலையில் நடந்த இந்திய தத்துவ அறிமுக வகுப்பை தொடர்ந்து விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் பிரித்தானியா அமைப்பின் சார்பாக அஜிதன் நடத்தும் மேலைத்தத்துவ அறிமுக வகுப்பு மூன்று நாட்கள் நடக்க இருக்கிறது.
ஜனநாயகம், தனி மனித சுதந்திரம் போன்ற நம் நவீனச் சிந்தனைகள் பல மேலை தத்துவங்களை அடிப்படையாக கொண்டவை. நம் சிந்தனைகளை சரியாக தொகுத்துக்கொள்ள அந்த தத்துவ சிந்தையாளர்களை பற்றிய அறிமுகமும் அவர்களுடைய கோட்பாடுகளைப் பற்றிய புரிதலும் மிக அவசியம். இந்த வகுப்புகள் புராதன கிரேக்க தத்துவங்கள் முதல் மறுமலர்ச்சி மற்றும் நவீன தத்துவக் கோட்பாடுகள் வரை அறிமுகம் செய்கின்றன. இன்றைய சூழலில் நம் வாழ்வு, இன்றைய அரசியல் சார்ந்து தர்க்கபூர்வமான , வரலாற்றுப்பின்னணிகொண்ட சிந்தனைகளை நாம் வளர்த்துக்கொள்ள இவை அவசியமானவை.
ஏற்கனவே அஜிதன் இந்தியாவில் நடத்திய மேலைத்தத்துவ அறிமுக வகுப்புகள், மேலை இசை அறிமுக வகுப்புகள் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன.
நண்பர்கள் வகுப்பில் கலந்துகொள்ள விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Contact : தீபா 00 44 790 999 7424
Location: Royal Agricultural University, Cirencester
நாட்கள் நவம்பர் 28 29 மற்றும் 30
(நிகழ்வின் முதல் நாள் நவம்பர் 28, வெள்ளிக்கிழமை மாலை “இந்திய தத்துவம் மேலைத்தத்துவத்தால் எப்படி மறுவடிவம் பெற்றது?” என்ற தலைப்பில் ஜெயமோகன் அவர்களின் சிறு உரை நடைபெறும்.)











